ஷீரடியின் எழுச்சி
- எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல், இறைவனுடைய அருளால் மட்டுமே இந்தியாவிலேயே மிக அதிகமான மக்களை ஈர்க்கும் புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக ஷீரடி உருவாகி இருக்கிறது.
- இருப்பினும் ஷீரடி சாய்பாபா தன் வாழ்நாட்களில், எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்தார். இதன் காரணமாகவே, அவர் பக்கீர் (யாசகர்) என்று அழைக்கப்பட்டார்.
- அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார். மனிதர்களில் பெரும்பாலோருக்கு அவருடைய எளிமையையும், தியாகத்தையும் அவருக்கும் இறைவனுக்கும் இருந்த நெருக்கத்தையும் புரிந்துகொள்வது மிகவும் கடினம் தான்.
- அவர் இறைவனையும், இறைநேசர்களையும் தவிர, வேறு எதையும் பொருட்படுத்தவில்லை. அவர் இறைநேசர்களுக்காகவே எல்லாவற்றையும் தியாகம் செய்தார்.
ஒரு நூற்றாண்டு கடந்திருந்தாலும், சாய்பாபாவின் தெய்வீக அன்பில் ஆறுதல் தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.